Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சவால்

Webdunia
சனி, 2 ஜனவரி 2021 (18:32 IST)
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் என்ற இடத்தில் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டம் ஒன்றில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார் என்பது தெரிந்ததே. அப்போது முக ஸ்டாலினிடம் பெண் ஒருவர் கேள்வி கேட்டது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதனை அடுத்து அந்த பெண்ணை முக ஸ்டாலின் வெளியேற்ற கூறியதை அடுத்து திமுக தொண்டர்கள் அவரை வெளியேற்றினார் 
 
மேலும் அவர் அமைச்சர் வேலுமணியின் ஆள் தான் என்றும், அந்த பெண் கிராம சபை கூட்டத்தை வேண்டுமென்றே குலைப்பதற்காக திட்டமிட்டு அமைச்சரால் அனுப்பப்பட்டவர் என்றும் முக ஸ்டாலின் குற்றம் சாட்டினார் 
 
இந்த நிலையில் முக ஸ்டாலினுக்கு அமைச்சர் எஸ் பி வேலுமணி சவால் விடுத்துள்ளார். முக ஸ்டாலின் என் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் உடனடியாக நான் ராஜினாமா செய்துவிட்டு அடுத்த தேர்தலில் சீட் கூட கேட்க மாட்டேன் என்று கூறியுள்ளார் 
 
அதே நேரத்தில் என் மீதான குற்றச்சாட்டை ஸ்டாலின் நிரூபிக்கவில்லை என்றால் அவர் அரசியலில் இருந்து விலக தயாரா? என்று எஸ்பி வேலுமணி சவால் விட்டுள்ளார். இந்த சவாலை முகஸ்டாலின் ஏற்றுக்கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு எடுத்த காரியங்கள் வெற்றி தரும்! - இன்றைய ராசி பலன்கள் (01.04.2025)!

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments