Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென் மாவட்டங்களில் வெள்ளம்: பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமா?

Webdunia
புதன், 20 டிசம்பர் 2023 (16:40 IST)
தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக பேருந்து, ரயில் மற்றும் விமான சேவை நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது தான் படிப்படியாக மீண்டும் தொடங்கியுள்ளது. தென் மாவட்டங்களில் முழுமையாக இயல்பு நிலை திரும்ப இன்னும் ஒரு சில வாரங்கள் ஏற்படும் என்றும் அந்த அளவுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் வெள்ள பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு பொங்கல் திருவிழா கொண்டாடப்படுமா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்  வெள்ள பாதிப்பு ஏற்பட்ட தென் மாவட்டங்களில் வழக்கம் போல் சிறப்பு பேருந்துகள் இயங்கும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

தென் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளால் சிறப்பு பேருந்து சேவைகளில் எந்த விதமான மாற்றமும் இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments