தமிழகத்தில் ரெண்டுதான் கட்சி: மற்றதெல்லாம் சில்லறை! – செல்லூர் ராஜூ

Webdunia
சனி, 25 ஜனவரி 2020 (08:49 IST)
தமிழகத்தில் இரண்டு கட்சிகள் மட்டும்தான் திராவிட கட்சிகள் மற்றவை சில்லறைகள் என அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் தமிழகமெங்கும் பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது. மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்றார். அப்போது பேசிய அவர் ”தமிழகத்தில் திராவுட கட்சிகள் என்றால் அது இரண்டுதான். மற்றதெல்லாம் சில்லறைகள்” என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இரண்டு கட்சி எதுவென்று அவர் வெளிப்படையாக கூறினாரா என்பது குறித்து தெரிய வராவிட்டாலும் அவர் அதிமுக மற்றும் திமுகைவைதான் கூறினார் என்று பேசிக் கொள்ளப்படுகிறது. மற்றவையெல்லாம் என்று அவர் குறிப்பிட்டது சிறிய அளவிலான திராவிட கட்சிகளையா அல்லது மற்ற அனைத்து கட்சிகளையுமா என அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழுதுள்ளது. எனினும் அதிமுகவிலயே திராவிட கட்சி அடையாளத்துடன் தேமுதிக போன்ற கட்சிகள் கூட்டணியில் இருக்கும் நிலையில் அமைச்சர் இப்படி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!.. காவல்துறை போட்ட கண்டிஷன்!...

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறையின் கடுமையான நிபந்தனைகள்

விமானத் துறையில் இரு நிறுவனங்களின் ஆதிக்கம் ஏன்? ப. சிதம்பரம் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments