Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களை தேடிச் சென்று மனுக்களை வாங்கிய அதிமுக அமைச்சர்

Webdunia
ஞாயிறு, 27 நவம்பர் 2016 (21:13 IST)
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் மாவட்டத்தில் உள்ள குறைகளை குறித்து மக்களிடம் தொடர்ந்து இரண்டாவது நாளாக மனுக்களை வாங்கினார்.


 


கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் மாவட்டத்தில் குளித்தலையில் பல பகுதிகளில் மக்களின் குறைகளை கிராம வாரியாக கேட்டறிந்தார்.

கரூர் அருகே குளித்தலை கோட்டத்திற்குட்பட்ட தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பேரூர், தோகைமலை, பில்லூர், வடசேரி, நெய்தலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் சுமார் 300 க்கும் மேற்பட்ட கிராம வாசிகளிடம் மனுக்களை பெற்றார்.

பொதுமக்கள் தங்களது மனுக்களுடன் செல் போன் நம்பரையும் இணைத்து மனு தருமாறும் கேட்டுக் கொண்டார். ஏனென்றால் மனுக்களின் நடவடிக்கை குறித்து பதில் அளிக்கவும், குறுஞ்செய்தி அனுப்ப வசதியாக உள்ளதுடன் பொதுமக்களின் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளதா? என்று நானே அறிந்து கொள்வேன் என்றும் தெரிவித்தார்.

குளித்தலை ஒன்றியத்திற்குட்பட்ட ராஜேந்திரம், பொய்யாமொழி, இனுங்கனூர், நல்லூர், ராணிமங்கலம் உள்ளிட்ட பல பகுதிகளில் மனுக்களை பெற்றார். சுமார் 310 க்கும் மேற்பட்ட மனுக்களை பெற்றுக்கொண்ட அமைச்சர், முதல்வர் அம்மாவின் கவனத்திற்கு கொண்டு சென்று அவர்களின் உத்திரவிற்கிணங்க., உடனடி தீர்வு காணப்படும் என்றார்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments