Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திராவிட மண்ணில் பாஜக வர முடியாதா? மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி..!

Webdunia
ஞாயிறு, 14 மே 2023 (12:19 IST)
திராவிட மண்ணில் பாஜக வர முடியாது என்று முதல்வர் ஸ்டாலின் அவருடைய திருப்திக்காக கூறி வருகிறார் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
 
கர்நாடக மாநில தேர்தல் முடிவு வெளியான போது திராவிட மண்ணிலிருந்து பாஜக விரட்டி அடிக்கப்பட்டது என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். இது குறித்து கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய இணை அமைச்சர் எல் முருகன் ’தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம் என்றும் தமிழ்நாட்டில் எத்தனையோ முறை திமுக தோல்வியை சந்தித்துள்ளது என்றும் கூறினார். 
 
ஒரு தேர்தல் தோல்வியை வைத்துக்கொண்டு எதையும் கூறிவிட முடியாது என்றும் திராவிட மண்ணில் பாஜக வர முடியாது என முதல்வர் முக ஸ்டாலின் அவருடைய திருப்திக்காக கூறி வருகிறார் என்றும் தெரிவித்தார். 
 
முன்னதாக புதுச்சேரியில் மீனவர்களின் குறை கேட்கும் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாஸ் ஏஞ்சல் காட்டுத்தீயை அணைக்க கனடா உதவி.. விரைந்தது விமானப்படை..!

ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை சமமாக பாவிக்க வேண்டும்.. தமிழக போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுரை..!

டெல்லியில் 60,000 வாக்காளர்கள் மாயம்! ஆம் ஆத்மி அரசு மீது பா.ஜ. கபகீர் குற்றச்சாட்டு

மாதக்கணக்கில் நடக்கும் போராட்டம்.. விஷம் குடித்து தற்கொலை செய்த விவசாயி..!

மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வருவது எப்போது? அமைச்சர் செந்தில் பாலாஜி

அடுத்த கட்டுரையில்
Show comments