Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவிகளின் பெயருக்கு மாறும் ரேஷன்... ரூ. 1000 திட்டம் அமலுக்கு வருவது எப்போது?

Webdunia
புதன், 4 ஆகஸ்ட் 2021 (08:45 IST)
குடும்பத் தலைவிகளுக்கான 1000 ரூபாய் அளிக்கும் திட்டம் குறித்து உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பேட்டியளித்தார். 

 
நடந்து முடிந்த தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் கவனம் ஈர்த்த ஒன்று குடும்பத்தலைவிகளுக்கான 1000 ரூபாய் அளிக்கும் திட்டம். இந்நிலையில் திமுக வெற்றி பெற்று இப்போது ஆட்சியில் இருக்கும் நிலையில் அவர்களின் தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் 1000 ரூபாய் அளிப்பதற்கான அறிவிப்பு எப்போது வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
இந்த புதிய திட்ட அறிவிப்பால் புதிதாக ரேஷன் கார்ட்கள் விண்ணப்பிக்கும் எண்ணிக்கை அதிகமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஒன்றாக இருந்த கார்ட்களையும் பிரித்து தனித்தனி கார்ட்களாக பிரிக்கும் விண்ணப்பங்களும் அதிகமாகியுள்ளதாம். அதோடு ரேஷன் அட்டைகளை மனைவி பேருக்கு மாற்றும் விண்ணப்பங்களும் அதிகரித்துள்ளதாம். 
 
இந்நிலையில் இது குறித்து உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பின்வருமாறு பேட்டியளித்தார். குடும்பத் தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் பற்றிய அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடுவார். இந்த திட்டத்திற்காக, ரேஷன் அட்டைகளை மனைவியின் பெயருக்கு மாற்றம் செய்ய பலர் முற்படுவதாகவும், அதற்காக இ-சேவை மையங்களில் காத்திருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. 
 
இதில் யாரும் பீதி அடைய வேண்டாம். உரிய நேரத்தில் இந்தத் திட்டம் குறித்து முதலமைச்சர் அறிவிப்பை வெளியிடுவார். அதுவரை அனைவரும் காத்திருக்கவும் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று உயர்ந்த தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தும் போட்டோ ஷூட்கள், வெற்று விளம்பரங்கள்: ஈபிஎஸ்

புயல் எதிரொலி.. மூடப்பட்டது சென்னை விமான நிலையம்.. அனைத்து விமானங்களும் ரத்து..!

புயல், கனமழையால் பாதிப்பா? உதவி எண்களை அறிவித்த பேரிடர் மேலாண்மை ஆணையம்..!

சென்னை உள்பட பல இடங்களில் கடல் சீற்றம்.. திருச்செந்தூரில் மட்டும் உள்வாங்கிய கடல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments