Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் எங்களுக்கு அருமையான அண்ணன்: அமைச்சர் அன்பில் மகேஷ்!

Mahendran
சனி, 3 பிப்ரவரி 2024 (11:11 IST)
நடிகர் விஜய் எங்களுக்கு அருமையான அண்ணன் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எங்களுக்கு அவரை அறிமுகப்படுத்தி உள்ளார் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

 நடிகர் விஜய் நேற்று அரசியலுக்கு வருவதை உறுதி செய்ததோடு தமிழக வெற்றி கழகம் என்ற தனது கட்சியின் பெயரையும் அறிவித்தார். இந்த நிலையில் விஜய் அரசியலுக்கு வந்ததை அரசியல் பிரபலங்கள் பலர்  வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று அமைச்சர் உதயநிதி, விஜய்யின் அரசியல் வருகைக்கு தனது வாழ்த்துக்கள் என்றும், இந்திய ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அமைச்சர் உதயநிதியை அடுத்து தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ் விஜய்யின் அரசியல் கட்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறிய போது ’நடிகர் விஜய்யை பொருத்தவரை உதயநிதி ஸ்டாலின் மூலம் எனக்கு கிடைத்த அருமையான அண்ணன், நேரடியாக அன்பொழுக பேசக்கூடியவர். உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தது போல் நானும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் கொள்கைகள் என்று வரும்போது தான் அவருடைய கட்சியின் நோக்கம் தெரியவரும் என்று தெரிவித்தார்.

 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மெரினாவில் இன்று விமானப்படை சாகச நிகழ்ச்சி.. எத்தனை மணிக்கு?

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

அடுத்த கட்டுரையில்
Show comments