Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிக்ஜாம் புயல்... 4 மாவட்டங்களுக்கு நாளை அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 3 டிசம்பர் 2023 (14:38 IST)
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் நாளை தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

மிக்ஜாம் புயல் காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று சென்னை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. அதன்படி சற்று முன்னர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

எனவே நாளை அவசிய தேவை இருந்தால் மட்டும் வீட்டை விட்டு வெளியேறவும் என்றும் இல்லாவிட்டால் வீட்டுக்குள் இருக்கவும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  மிக்ஜாம் புயல் காரணமாக பலத்த காற்று மற்றும் அதிகனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சாலைகளில் மின்கம்பங்கள், மரங்கள்  பாதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் எனவே பொதுமக்கள் பாதுகாப்பாய் இருக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் பொது மக்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது.

 மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால்  பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

அடுத்த கட்டுரையில்
Show comments