Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியைத் தாண்டியது

Webdunia
வியாழன், 26 நவம்பர் 2015 (10:49 IST)
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியையை எட்டியுள்ளது. அணைக்கு 6,925 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.


 

 
தமிழகத்தின் பெரிய அணையாகிய மேட்டூர் அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகின்றது.
 
தற்போது அந்த அணையின் நீர் மட்டம் 90.32 கன அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 6,925 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
 
அணையின் நீர் இருப்பு 53.01 டிஎம்சியாக உள்ளது. இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால், அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 500 கன அடியாக உள்ளது.
 
பாசனத்திற்காக கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த உயரம் 120 அடி, இதன் மொத்த கொள்ளளவு 93.4 டி.எம்.சியாகும்
 
கடந்த 2 வாரங்களாக பெய்துவரும் கனமழை காரணமாக தமிழகத்திலுள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments