நாளை மே தின விடுமுறை நாள்: சென்னை மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்!

Mahendran
செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (17:04 IST)
நாளை மே தினம் விடுமுறை என்பதால் சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
அரசு விடுமுறை தினங்களில் மெட்ரோ ரயில்கள் அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டு வரும் நிலையில் நாளை விடுமுறை தினத்தை சென்னையில் மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாளைய தினம் நெரிசல் மிகு நேரமான காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரையிலும், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
 
அதேபோல் இரவு 10 முதல் 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் 15 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னத்த கலைஞர் செஞ்சாரு? பிரேமலதா கூட்டணி.. வைரலாகும் கேப்டனின் பழைய வீடியோ

கோபத்தில் திமுக!.. தவெக பக்கம் போகும் காங்கிரஸ்!... நடப்பது என்ன?..

ஓகே.. தோல்வி அடைய வாழ்த்துக்கள்!.. திமுகவை நக்கலடிக்கும் எடப்பாடி பழனிச்சாமி..

தீயசக்தி திமுகவை எதிர்த்தவர் விஜயகாந்த்.. அவரின் ஆன்மா மன்னிக்காது!.. பாஜக விமர்சனம்..

திமுகவுடன் கூட்டணி!.. கட்சியினர் விருப்பம்!. தேர்தலில் போட்டியிடுவேன்!.. பிரேமலதா பேட்டி!...

அடுத்த கட்டுரையில்
Show comments