Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீத்தேன் திட்ட போராட்டக்காரர்களை சந்திக்க தமிழக முதல்வர் ஒப்புதல்

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2017 (07:43 IST)
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசல் பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் போராட்டக் குழுவினர்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும் மார்ச் 1-ம் தேதி சந்திக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது




மத்திய அரசின் திட்டமான ஹைட்ரோ கார்பன் என்ற பொதுப் பெயரில் அழைக்கப்படும் மீத்தேன் வகை வாயுக்களின் கலவையை பூமியில் துளையிட்டு எடுக்கும் திட்டத்திற்கு நெடுவாசல் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களாக உண்ணாவிரத போராட்டம் உள்பட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு தமிழக அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர்களும் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இப்பிரச்னை தொடர்பாக, நெடுவாசல் போராட்டக் குழுவினர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க அனுமதி கேட்டதாகவும், அவர்களை வருகிற மார்ச் 1-ம் தேதி முதல்வர் சந்திக்க ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் வந்துள்ளன. இந்த சந்திப்பின்போது மத்திய அரசை முதல்வர் இந்த திட்டம் வேண்டாம் என வலியுறுத்த வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கையாக வைக்கவுள்ளனர்.

ஹைட்ரோ கார்பன் என்ற பொதுப் பெயரில் அழைக்கப்படும் மீத்தேன் வகை வாயுக்களின் கலவையை பூமியில் துளையிட்டு எடுக்கும் திட்டத்தின் மூலம், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்றும் இதன் காரணமாக நிலத்தடி நீர் வளம் குறையும் என்பது இந்தத் திட்டத்தை எதிர்ப்பவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே நடந்த முதல் நேரடி பரிமாற்றம் - இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு..!

விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா? தவெக தர்மபுரி மாவட்ட தலைவர் சிவா தகவல்

தலைமறைவாகவில்லை, படப்பிடிப்பில் தான் இருந்தேன்: கஸ்தூரி விளக்கம்.!

எலான் மஸ்க்கை கெட்ட வார்த்தையில் அபிஷேகம் செய்த அதிபரின் மனைவி! - எலான் மஸ்க்கின் ரியாக்‌ஷன் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments