Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செம பிசி வைகோ -இரண்டு வாரத்திற்கு ஆஃப்லைன்

Webdunia
புதன், 19 டிசம்பர் 2018 (15:43 IST)
அரசியலில் செம பிசியாக வலம் வந்துகொண்டிருக்கும் வைகோ இன்னும் இரண்டு வாரத்திற்கு தொடர்பு எல்லைக்கு வெளியே செல்ல இருக்கிறார்.

ஆளும் மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்தல், திருமா வளவனுடன் முட்டல்; மோதல்; கைகுலுக்கல், அதிமுக அரசுக்கு எதிராக செயல்பட்டு ஸ்டாலினை முதல்வராக்குதல் ஆகியவையே இப்போது தமிழ்நாடு மதிமுக பொதுச்செயலாளர் முன் உள்ள அளப்பறியப் பணிகள். இந்த வேலைகளில் மிகவும் பிசியாக இருந்து வரும் அவர், இன்னும் இரண்டு வாரத்திற்கு யார் கண்ணிலும் படாமல் தலைமறைவாக இருக்கிறார். எதற்காகத் தெரியுமா?

ஆண்டுதோறும் தான் எடுத்துக்கொள்ளும் கேரள ஆயுர்வேத சிகிச்சைக்காகத்தான். ஆம் இன்னும் ஓரிரு நாளில் சிகிச்சைகளுக்காக கேரளா செல்ல இருக்கிறார். அதற்காக தான் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள், கூட்டங்கள் யாவற்றையும் ஒத்தி வைத்துள்ளார். கேரளாவில் சிகிச்சை முடித்து  விட்டு புத்தாண்டு கொண்டாடிவிட்டு புது வைகோ வாக அடுத்த ஆண்டு தமிழக மக்களை சந்திக்க இருக்கிறார், வைகோ.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

கூகிள் மேப் உதவியுடன் படகில் 275 கி.மீ பயணம்! கும்பமேளா செல்ல புது ரூட் பிடித்த வடக்கு நண்பர்கள்!

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments