Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதிமுக மாநில அமைப்புச் செயலாளர் சீமாபஷீர் அதிமுகவில் இணைந்தார்

Webdunia
புதன், 30 ஜூலை 2014 (17:39 IST)
மதிமுக மாநில அமைப்புச் செயலாளர் சீமாபஷீர் அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
இதுகுறித்து அதிமுக வெளியிட்ட செய்திக் குறிப்பு:-
 
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில், புதன்கிழமை இன்று மதிமுக மாநில அமைப்புச் செயலாளரும், சென்னை மாநகராட்சி 60வது வார்டு மாமன்ற உறுப்பினருமான சீமாபஷீர், வட சென்னை மாவட்ட துணைச் செயலாளர் சு.ஆ.இயேசுராஜ், துறைமுகம் பகுதிச் செயலாளர் மகபூப், ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் முஸ்தபா, துறைமுகம் பகுதி மாவட்டப் பிரதிநிதி ஜாஹீர் ரபி ஆகியோர் நேரில் சந்தித்து தங்களை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி உடன் இருந்தார்.
 
இவ்வாறு அதிமுக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments