தற்கொலைக்கு முயன்ற கணேசமூர்த்தியின் உடல்நிலை கவலைக்கிடம்: வைகோ அதிர்ச்சி..!

Siva
புதன், 27 மார்ச் 2024 (08:24 IST)
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் மனம் உடைந்த ஈரோடு மதிமுக எம்பி கணேசமூர்த்தி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் நிலையில் அவருடைய உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரே ஒரு தொகுதி மட்டும் ஒதுக்கிய நிலையில் அந்த ஒரு தொகுதியான திருச்சியில் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுகிறார். இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தார் ஈரோடு எம்பி கணேசமூர்த்தி தனக்கு வாய்ப்பு கிடைக்காததால் கடந்த 24ஆம் தேதி தனது வீட்டில் தற்கொலைக்கு முயன்றார்

இதனையடுத்து அவர் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால் வைகோ உட்பட மதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

கணேசமூர்த்தியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும் விஷ முறிவு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அடுத்த 48 மணி நேரத்திற்கு பிறகு தான் அவரது உடல்நிலை குறித்து உறுதியான தகவல்கள் கூற முடியும் என்றும் டாக்டர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

விஜய்யின் ஈரோடு பொதுக்கூட்டம்.. தேதி, நேரத்தை அறிவித்த செங்கோட்டையன்..!

ரூ.45 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்தது.. 5 பேர் காயம்..!

நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள்: அரசியல்வாதிகளுக்கு கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments