Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக உடன் மக்கள் தேமுதிக இணைந்தது: நாளை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை

Webdunia
திங்கள், 11 ஏப்ரல் 2016 (21:15 IST)
தேமுதிகவிலிருந்து நீக்கப்பட்டு, மக்கள் தேமுதிக என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ள சந்திரகுமார் திமுக தலைவர் கருணாநிதியை இன்று சந்தித்தார்.


 
 
மக்கள் நலக் கூட்டணியுடன், தேமுதிக கூட்டணி சேர்ந்தது தவறு என்றும், திமுகவுடன் கூட்டணி வைப்பதே சிறந்தது என்று குரல் எழுப்பி, தேமுதிகவில் இருந்து அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டவர் சந்திரகுமார்.
 
அவர் தற்போது, மக்கள் தேமுதிக என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். அவருக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில், திமுகவில் இணைவதற்கு அழைப்பை விடுத்தார். அதனை ஏற்று, இன்று மாலை அவர் கருணாநிதியை சந்தித்தார்.
 
இது குறித்து கூறிய சந்திரகுமார், மக்கள் தேமுதிகவுக்கு திமுக கூட்டணியில் போட்டியிட வாய்ப்பு தாருங்கள் என்று கேட்டுள்ளோம். மேலும்  கூட்டணியில் எத்தனை தொகுதிகள் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வோம் என்றார்.
 
மேலும் திமுக கூட்டணிக்கு மக்கள் தேமுதிக அளித்த  ஆதரவை ஏற்பதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு நாளை வருமாறு கருணாநிதி கூறியதாக சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments