Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் பரிசுத்தொகுப்பை சாலையில் கொட்டி போராட்டம்: மயிலாடுதுறையில் பரபரப்பு!

Webdunia
திங்கள், 17 ஜனவரி 2022 (16:54 IST)
பொங்கல் பரிசு தொகுப்புகள் தரமின்றி இருப்பதாகவும் பொங்கல் முடிந்த பின்னர் பொங்கல் பரிசு தொகுப்பு அளித்ததாகவும் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை சாலையில் கொட்டி பொதுமக்கள் போராட்டம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு பொருட்கள் தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியில் உள்ள ரேஷன் கடை ஒன்றில் பொங்கல் முடிந்த பின்னர் பொங்கல் பரிசு தொகுப்பு தந்ததாக கண்டனம் தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் ஈடுபட்டனர்
 
மேலும் பலருக்கு பொங்கல் பரிசு தராமலேயே அவர்களுக்கு தந்து விட்டதாக குறுஞ்செய்தி வந்து இருப்பதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.மேலும் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் தரமற்றதாக இருப்பதாக கூறி அந்த பொருட்களை சாலையில் கொட்டி போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து போதும் அதிகாரிகள் போராட்டம் செய்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.. தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

5 ஆண்டுகளாக 60 பேர் பாலியல் வன்கொடுமை.. 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..!

மீண்டும் உச்சம் செல்லும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 240 ரூபாய் உயர்வு..!

எக்கமா.. எக்கச்சக்கமா..! பொங்கலையொட்டி விண்ணை தொட்ட விமான டிக்கெட் விலை!

ஆட்டோ கட்டணம் உயர்வு.. தொழிற்சங்கத்தினர் அறிவிப்பை தமிழக அரசு ஆதரிக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments