Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9 நிமிடத்தில் இவ்வளவு மின்சாரம் மிச்சமா? – அமைச்சரின் ஆச்சர்ய தகவல்!

Webdunia
திங்கள், 6 ஏப்ரல் 2020 (09:48 IST)
பிரதமரின் வேண்டுகோளை ஏற்று நேற்று இரவு விளக்குகள் அணைக்கப்பட்டதில் அதிகளவு மின்சாரம் சேமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மக்களின் ஒற்றுமையை நிரூபிக்க வேண்டி நேற்று இரவு 9 மணிக்கு மின்விளக்குகளை அணைத்துவிட்டு தீபங்கள் மற்றும் மெழுகுவர்த்திகளை ஏற்ற பிரதமர் மோடி அறிவுறுத்தியிருந்தார்.

மக்கள் தவறாக அதை புரிந்துகொண்டு மொத்த மின் இணைப்பையும் அணைக்கக்கூடும் என கருதிய தமிழக மின்சார வாரியம் மின்விளக்கை மட்டும் அணைக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது.

இந்நிலையில் நேற்று 9 மணிக்கு தொடங்கி 9 நிமிடங்கள் வரை பல இடங்களில் விளக்குகள் அணைக்கப்பட்டதால் அதிகமான மின்சாரம் சேமிக்கப்பட்டதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

மின்சார விளக்குகள் நிறுத்தப்பட்டதால் சென்னையில் மட்டும் 350 மெகாவாட் மின்சாரம் மிச்சப்பட்டதாக தெரிவித்துள்ள அவர், தமிழகம் முழுவதும் இதனால் மொத்தமாக 2200 மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இளம்பெண் டிஜிட்டல் கைது.. ஆடையை கழற்ற சொல்லி அட்டூழியம் செய்த மர்ம நபர்கள்..!

தமிழக வெள்ள பாதிப்பு: பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்த திமுக..!

சபரிமலையில் கனமழை: பக்தர்கள் கூட்டம் குறைந்ததாக தகவல்..!

ஃபெங்கல் புயல்: விழுப்புரம், திருவண்ணாமலையில் கனமழை.. வீடுகள் இடிந்தன..!

கனமழை எதிரொலி: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரி விடுமுறை?

அடுத்த கட்டுரையில்
Show comments