நடிகர் மன்சூர் அலிகான் திடீரென காலவரையறையற்ற உண்ணாவிரதம்.. என்ன காரணம்?

Mahendran
புதன், 3 டிசம்பர் 2025 (11:15 IST)
நடிகரும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவருமான மன்சூர் அலிகான், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த பணிக்கு  எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் காலவரையறையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
 
இந்திய தேர்தல் ஆணையம், தமிழ்நாடு, கேரளம் உட்பட 12 மாநிலங்களில் இரண்டாம் கட்டமாக இந்த எஸ்ஐஆர் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் கீழ், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை பெற்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்கின்றனர்.
 
இந்த நடவடிக்கை, பிற மாநிலத்தவர்களுக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமை அளிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சாட்டி, மன்சூர் அலிகான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 
 
இந்த பணியை உடனடியாக நிறுத்தும் வரை தனது போராட்டத்தை கைவிட போவதில்லை என்று அவர் அறிவித்துள்ளார். இந்த போராட்டம் சென்னை எழும்பூரில் இன்று காலை தொடங்கப்பட்டது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடிகர் மன்சூர் அலிகான் திடீரென காலவரையறையற்ற உண்ணாவிரதம்.. என்ன காரணம்?

ஐரோப்பிய நாடுகளுடன் போர்!.. ரஷ்ய அதிபர் புதின் கடும் எச்சரிக்கை!...

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பில் வரலாறு காணாத வீழ்ச்சி! ஒரு டாலர் ரூ. 90-ஐ எட்டியது.

சென்னையில் நீடிக்கும் மழை.. வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புகள்.. தண்ணீரை வெளியேற்றும் பணிகள் தீவிரம்..!

பானிபூரிக்கு ஆசைப்பட்டு ஓப்பனான வாய்!.. மூட முடியாமல் தவித்த பெண்!...

அடுத்த கட்டுரையில்
Show comments