Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமலாவுக்குதான் வெற்றி!? அமெரிக்கா தேர்தலுக்கு மன்னார்குடியில் சிறப்பு பூஜை!

Webdunia
செவ்வாய், 3 நவம்பர் 2020 (10:58 IST)
அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் வெற்றிபெற வேண்டும் என மன்னார்குடியில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருவது வைரலாகியுள்ளது.

அமெரிக்க தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். கமலா ஹாரிஸின் தாத்தா கோபாலன் தமிழகத்தின் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரத்தை சேர்ந்தவர். முன்னதாக கமலா ஹாரிஸ் தேர்தலில் போட்டியிடுகிறார் என தெரிந்ததுமே மன்னார்குடி சுற்றுவட்டார பகுதிகளில் கமலா ஹாரிஸ் வெற்றிபெற வாழ்த்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

இந்நிலையில் அமெரிக்க தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டும் என கோபாலனின் சொந்த ஊரான துளசேந்திரபுரத்தில் உள்ள கோவில் சிறப்பு வேண்டுதல்கள் மற்றும் பூஜைகளை மக்கள் நடத்தி வருகின்றனர். அமெரிக்க தேர்தலுக்காக இந்தியாவில் சிறப்பு பூஜை நடத்துவது இதுவே முதன்முறை என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments