காவலர்களுக்கு கொரோனா: இழுத்து மூடப்பட்ட மந்தைவெளி ரயில் நிலையம்!

Webdunia
செவ்வாய், 12 மே 2020 (08:16 IST)
சென்னை மந்தைவெளி ரயில் நிலையத்தில் பணிபுரிந்த காவலர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் அந்த பகுதி பாதிப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஊரடங்கு இந்த வார இறுதியோடு முடிய இருக்கும் நிலையில் பேருந்து மற்றும் ரயில்சேவைகள் மீண்டும் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மந்தைவெளி ரயில் நிலையத்தில் பணிபுரிந்த 5 காவலர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

உடனடியாக மருத்துவமனைகளில் அவர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் மந்தைவெளி பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மந்தைவெளி தடத்தில் ரயில்களை இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி மற்றும் சுகாதார விதிகளின்படி அங்கு 28 நாட்களுக்கு தடை தொடரும் என்பதால் கடற்கரை முதல் வேளச்சேசி வரை மந்தைவெளி மார்க்கமாக செயல்படும் அனைத்து ரயில்சேவைகளும் தடைபடும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக ஆட்சியில் 4 லட்சம் கோடி ஊழல்!.. எடப்பாடி பழனிச்சாமி புகார்...

திருப்பரங்குன்றம் விவகாரம்: உத்தரவை அன்றே நடைமுறைப்படுத்தியிருந்தால், சிக்கல்கள் ஏற்பட்டிருக்காது.. நயினார் நாகேந்திரன்

சோனியா காந்தி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் சொல்வது என்ன?

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் தீர்ப்பு.. மேல்முறையீடு செய்வோம் என அமைச்சர் ரகுபதி பேட்டி..!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும்.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments