Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமியுடன் உடலுறவு; ஆழமான காதலின் வெளிப்பாடுதான் இது: நீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு!

சிறுமியுடன் உடலுறவு; ஆழமான காதலின் வெளிப்பாடுதான் இது: நீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு!

Webdunia
புதன், 5 ஏப்ரல் 2017 (14:33 IST)
மைனர் சிறுமியை பலாத்காரம் செய்ததாக இளைஞர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் இதனை மும்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்து அந்த இளைஞனை விடுதலை செய்துள்ளது.


 
 
கடந்த 2014-ஆம் ஆண்டு தன்னை சந்தீப் என்ற இளைஞர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை பலாத்காரம் செய்ததாகவும், ஆனால் தற்போது திருமணம் செய்ய மறுப்பதாகவும் சீமா என்ற சிறுமி காவல்துறையில் புகார் அளித்தார்.
 
இந்த புகார் தொடர்பான வழக்கை விசாரித்த மும்பை செசன்ஸ் நீதிமன்றம் கடந்த ஆண்டு சந்தீப்பிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து தீர்ப்பளித்தது. ஆனால் இதனை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் சந்தீப். இதனை விசாரித்த நீதிபதி சந்தீப்பிற்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து நேற்று உத்தரவு பிறப்பித்தனர்.
 
மேலும், பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் பெண் மைனராக இருந்தாலும், இருவரும் ஆழமாக காதலித்துள்ளனர். அந்த வெளிப்பாடாகத்தான் இருவரும் உடலுறவில் ஈடுபட்டனர். எனவே இதனை குற்றமாக கருத முடியாது என நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார். சந்தீப்பை 15000 ரூபாய் செலுத்தி ஜாமினில் விடுவிக்கவும் உத்தரவிட்டுள்ளார் நீதிபதி.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் நாளை வெயில் சுட்டெரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

சென்னையில் பிரம்மஸ்தான மஹோத்சவம்.. வருகிறார் மாதா அமிர்தானந்தமயி..!

வாழ்நாள் முழுவதும் தினமும் எவ்வளவு பானிபூரி வேண்டுமானாலும் சாப்பிடலாம்.. எவ்வளவு தெரியுமா?

அ.தி.மு.க.-வில் இருந்து வந்தவர்கள்தான் முதல்வருக்கு டப்பிங் கொடுக்கிறார்கள் – அண்ணாமலை பதிலடி

தமிழ்நாட்டில் தங்குதடையின்றி சாதிய வன்கொடுமைகள்.. முதல்வருக்கு பா ரஞ்சித் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்