Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்போன் சார்ஜில் இருக்கும்போதே ஹெட்போனில் பாட்டு கேட்ட வாலிபர் பலி

Webdunia
புதன், 5 ஏப்ரல் 2017 (04:40 IST)
செல்போன் சார்ஜில் இருக்கும்போது பேசுவதோ அல்லது பாட்டு கேட்பதோ கூடாது என பலமுறை அறிவுறுத்தியும் கேட்காமல் ஒருசிலர் செல்போனில் சார்ஜ் ஏறிக்கொண்டு இருக்கும்போது பாட்டு கேட்பதால் விபரீதத்திற்கு ஆளாகி வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் செல்போனுக்கு சார்ஜ் போட்டிருந்த நிலையில் ஹெட்போன் மூலம் பாட்டு கேட்டுக் கொண்டிருந்த வாலிபர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியானார்.



 


அடையாறு பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் பணிபுரிந்த மணிப்பூரை சேர்ந்த பில்லோ ரியாங் என்பவர் சமீபத்தில் தான் தங்கியிருந்த அறையில்  செல்போனுக்கு ஜார்ஜ் போட்டுக்கொண்டே, ஹெட்போனில் பாட்டு கேட்டு கொண்டிருந்தார் அந்த சமயம் திடீரென ஹெட்போன் மூலம் மின்சாரம் பாய்ந்து, காது நரம்பு வெடித்தது. இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த  பில்லோ ரியாங் பரிதாபமாக பலியானார்.

இதுகுறித்து செல்போன் சர்வீஸ் எஞ்சினியர் ஒருவர் கூறியபோது, 'செல்போன்களை நீண்ட நேரம் சார்ஜ் செய்வது தவறு. இரவு முழுவதும் சார்ஜ் போட்டு விட்டு அருகில் தூங்குவது பிரச்னைக்கு வழிவகுக்கும். தற்போது வரும் லித்தியம் பேட்டரிகள் அதிக நேரம் சார்ஜ் செய்யப்படும் போது வெப்பமாகி வெடிக்க வாய்ப்புள்ளது. போனை 100% சார்ஜ் ஏற்றியே தீர வேண்டும் என நினைப்பது தவறு, அதே போல் பேட்டரி குறைந்து விட்டது என எச்சரிக்கை வரும் போதே சார்ஜ் செய்ய வைப்பது தான் நல்லது. குறைந்த சார்ஜ் இருக்கும் போது இந்த பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறினார்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments