Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களை நிர்வாணமாக சித்தரித்த வாலிபர்: போலீஸில் கைது

Webdunia
திங்கள், 1 ஜூலை 2019 (18:19 IST)
திருவண்ணாமலை அருகே பெண்ணை நிர்வாண்மாக சித்தரித்து, சமூக வலைத்தளங்களில் பரப்பிய வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை பள்ளிகொண்டாப்பட்டு சம்பந்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் நரேந்திரன். 37 வயதான இவர், 35 வயதான ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார்.

அந்த பெண்ணை பாலியல் ரீதியாக பல முறை தொந்தரவு செய்து வந்துள்ளார். அந்த செயலுக்கு நரேந்திரனின் மனைவியும் துணை புரிந்துள்ளார்.

இதனை தொடர்ந்து நரேந்திரன், அந்த பெண்ணின் புகைப்படத்தை, கணிணி தொழில்நுட்பத்தின் மூலம் நிர்வாணமாக இருப்பது போன்று சித்தரித்து வாட்ஸ ஆப், டிவிட்டர், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளார்.

இதனை அறிந்து கோபமுற்ற பெண், நரேந்திரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது நரேந்திரனும் அவரது மனைவியும் சேர்ந்து அந்த பெண்ணை தாக்கினர். இனிமேல் வாக்குவாதம் செய்தால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

இதனை தொடர்ந்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸாரிடம் புகார் குடுத்துள்ளார் அந்த பெண். அதன் பின்பு அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து நரேந்திரனை கைது செய்தனர்.

மேலும் தலைமறைவான நரேந்திரனின் மனைவியை திருவண்ணாமலை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.67,000ஐ தாண்டிவிட்டது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.520 உயர்வு..!

சொத்துவரி செலுத்த இன்று கடைசி தினம்.. நாளை முதல் தனிவட்டி அபராதம்: சென்னை மாநகராட்சி..!

செங்கோட்டையனுக்கு Y கொடுத்தால் ஈபிஎஸ்-க்கு Z+ கொடுக்க வேண்டும்: வைகைச்செல்வன்

இன்று ரம்ஜான் விடுமுறை இல்லை: வங்கிகள் வழக்கம்போல் செயல்படும்: ரிசர்வ் வங்கி உத்தரவு

அடுத்த கட்டுரையில்