Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூதாட்டி முகத்தில் மனிதக் கழிவு பூசிய நபர் கைது !

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2022 (14:01 IST)
சேலம் மாவட்டம் காடையாம்பட்டியில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும்  ஒரு முதாட்டியின்  மீது மனிதக் கழிவுகளை பூசித் தொல்லைகொடுத்த  கிருஷ்ணன் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம்  காடையாம்பட்டி தாலூக்கா  கொங்குபட்டி ஊராட்சியில் உள்ள  கொத்தப்புளியனூர்  என்ற கிராமத்தில் வசித்து வருபவர் பாப்பாயி(90). இவரிடம் அதே கிராமத்தில் வசித்து வரும் கிருஷ்ணன் என்பவர் ஆபாசமாகப் பேசியும் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சைய்பத்தில் மூதாட்டி பாப்பாயி படுத்திருந்தபோது, அவரை கிருஷ்ணன் திட்டியுள்ளார். அதற்குப் பாப்பாயும் பதிலுக்குத் திட்டியுள்ளார். இதில்,ஆத்திரமடைந்த கிருஷ்ணன் மனிதக் கழிவை எடுத்து, மூதாட்டியின் முகத்தில் பூசியுள்ளார்.

இதில், மூதாட்டி கூச்சல் போடவே, அருசில் வசிப்போர் ஓடிவந்து, இதுகுறித்து, தீவட்டிப்பட்டி, போலீஸாருக்குத் தகவல் அளித்தனர்.  இதையடுத்து, கிருஷ்ணன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

உண்டியலில் விழுந்த ஐஃபோன் முருகனுக்கே சொந்தம்! பக்தருக்கு அதிர்ச்சி கொடுத்த கோவில் நிர்வாகம்!

நெல்லை நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் படுகொலை..சட்டம் - ஒழுங்கு எங்கே.. அன்புமணி கேள்வி..!

செந்தில் பாலாஜி வழக்கில் தமிழக அரசிடம் இருந்து பதில் வரவில்லை: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி

அடுத்த கட்டுரையில்
Show comments