Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்யாணம் ஆனதை மறைத்து மைனர் பெண்ணிடம் அத்துமீறிய நபர் – போக்ஸோ சட்டத்தில் கைது!

Webdunia
ஞாயிறு, 20 டிசம்பர் 2020 (16:17 IST)
மதுரை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை எனும் பகுதியில் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட நபரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம், புதுக்கோட்டை அருகே இருக்கும் தென்பழஞ்சி கிராமத்தில் வசித்து வருபவர் தங்கபாண்டி. இவருக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. மிக இளம் வயதிலேயே திருமணம் செய்துகொண்டதால் தங்கபாண்டி இப்போதும் இளைஞர் போன்ற தோற்றத்திலேயே இருந்துள்ளார். கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ள தங்கபாண்டி அப்படி வேலைக்கு சென்ற இடத்தில் மைனர் பெண் ஒருவரிடம் பழக ஆரம்பித்துள்ளார்.

தனக்கு திருமணம் ஆனதை மறைத்து அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, அவருடன் அந்தரங்கமாக பழகியுள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமாகவே, அவரது பெற்றோருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து அவரிடம் விசாரித்ததில் தங்கபாண்டியைப் பற்றிய விவரத்தை சொல்லியுள்ளார். அதன் பின்னர் போலிஸாரிடம் புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து தங்கபாண்டி போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கனமழை எதிரொலி: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரி விடுமுறை?

கனமழை எதிரொலி: தமிழகத்தில் இன்று ரயில்கள் ரத்து குறித்த முழு விவரங்கள்..!

இன்று காலை 10 மணிக்குள் 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்
Show comments