Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாமல்லபுரம் கடற்கரையில் மீனவர் வெட்டிக் கொலை! – சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி!

Webdunia
வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (08:45 IST)
மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் மீனவர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாமல்லப்புரம் மீனவர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அசோக். மீனவரான இவர் தனது தந்தை மற்றும் சகோதரருடன் மீன்பிடித்து விற்பனை செய்து வந்தார். இரவு நேரங்களில் சில சமயங்களில் அசோக் கடற்கரையில் படுத்து உறங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

நேற்று முன்தினம் அவ்வாறாக அவர் கடற்கரையில் தூங்கியுள்ளார். காலையில் மீன்பிடிக்க மீனவர்கள் கடற்கரை பகுதி வந்தபோது அசோக் பல இடங்களில் வெட்டப்பட்டு பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் அசோக்கின் உடலை கூராய்வுக்கு அனுப்பி வைத்ததுடன், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அசோக் கொலைக்கு தனி பகை காரணமா? அல்லது சுற்றுலா வந்த மதுபோதை ஆசாமிகள் யாரும் அசோக்கை கொன்றார்களா என்பது குறித்து அப்பகுதியில் உள்ள விடுதிகள், உணவகங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அப்பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மெட்ரோ திட்டத்தை டெல்லி நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: ராமதாஸ்

நவீன் பட்நாயக் வலது கையாக இருந்த ஐஏஎஸ் அதிகாரி விகே பாண்டியன் மனைவி ராஜினாமா..!

வக்பு வாரிய மசோதா விவாதத்தில் கலந்து கொள்ளாத ராகுல் காந்தி: குவியும் கண்டனங்கள்..!

செலவு கோடி ரூவாப்பே.. ஆனால் கோவில் நிலையோ பரிதாபம்! - காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை!

வருஷம் 3 கோடி சம்பளம்.. வீடு, கார் சகல வசதிகளும்..! ஆனா யாரும் வரமாட்றாங்க! - ஆஸ்திரேலியாவில் ஒரு விநோத பகுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments