Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூமிக்கு அடியில் இருந்து வரும் மர்ம சத்தம்.. பீதியில் உறைந்த கிராமம்!

Webdunia
புதன், 14 செப்டம்பர் 2022 (15:26 IST)
மகாராஷ்டிராவில் கிராமம் ஒன்றின் அருகே பூமிக்குள்ளிருந்து அமானுஷ்யமான சத்தங்கள் கேட்பதால் அம்மக்கள் பீதியில் உள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் மாவட்டத்தின் கில்லாரி பகுதியில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள கிராமம் ஹசோரி. கடந்த 1993ல் ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கத்தால் இந்த கிராமம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் பாதிக்கப்பட்டது.

அப்போது சுமார் 10 ஆயிரம் பேர் நிலநடுக்கத்தில் சிக்கி பலியாகியுள்ளனர். இந்நிலையில் கடந்த சில காலமாக இந்த கிராமத்தின் அருகில் உள்ள சில பகுதிகளில் பூமிக்கு உள்ளேயிருந்து வித்தியாசமான சத்தங்கள் கேட்பதாக அம்மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

அந்த சத்தம் அமானுஷ்யமாக இருப்பதாக அம்மக்கள் நடுங்கும் சூழலில் எதனால் அந்த சத்தம் ஏற்படுகிறது என கண்டறிய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து லத்தூர் மாவட்ட கலெக்டர் நேரடியாக அம்மக்களை சந்தித்து பீதியடைய வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

அந்த அமானுஷ்ய சத்தம் குறித்து ஆய்வு செய்ய சுவாமி ராமானந்த் தீர்த் மராத்வாடா பல்கலைக்கழக நிபுணர்கள் குழு அந்த கிராமத்திற்கு சென்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments