Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியிடம் பேசியதைக் கண்டித்ததால் கம்பியால் குத்திய சகோதரர்கள்

Webdunia
திங்கள், 28 ஜூலை 2014 (09:33 IST)
மனைவியிடம் பேசியதைக் கண்டித்தவரை வேனில் சகோதரர்கள் இருவர் கடத்திச் சென்று கம்பியால் குத்தியுள்ளனர்.

மதுரை கீரைத்துறையை சேர்ந்தவர் சுப்புராஜ் மகன் 27 வயதுடைய சரவணன். இவர் சொந்தமாக ஒரு மினி வேன் வைத்து ஓட்டி வருகிறார்.

இவருக்குச் செல்லூர் பகுதியை சேர்ந்த ராசு மகன் 21 வயதுடைய அருண் பாண்டியன் என்பவர் சாமியான பந்தல் வேலைக்காக வேனை வாடகைக்கு எடுப்பதில் பழக்கம் ஏற்பட்டது.

இதில் இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்நிலையில் தனது மனைவியிடம் அருண் பாண்டியன் பேசியதை சரவணன் கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்துள்ளார்.

இந்நிலையில் வழக்கம்போல் வேனை வாடகைக்கு பேசியதாக கூறப்படுகிறது. அதன்படி சரவணன் வேனை எடுக்கும் போது, அவரை உட்கார சொல்லிவிட்டு அருண் பாண்டியன் வேனை ஓட்டியுள்ளார்.

கோரிப்பாளையம் அருகே வேன் வந்த போது அங்கு நின்றிருந்த தனது தம்பியான அஜித் குமாரையும் வேனில் ஏற்றிக் கொண்டார். இவர்கள் ஒத்தக்கடையில் இருந்து திருமோகூர், திருவாதவூர் வழியாக மேலூர் சென்றுள்ளனர்.

அங்கு சரவணனை கொலை செய்ய சரியான இடம் கிடைக்காததால் மதுரைக்கு வேன் ஓட்டி வந்தனர். தெற்குத் தெரு என்ற இடத்தில் வந்த போது ரோட்டின் ஓரத்தில் இருந்த ஒரு ஆலமரம் மறைக்கு பின்பு வேனை நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.

பின்னர் மறைத்து வைத்திருந்த கம்பியால் சரவணனின் கழுத்தில் அருண் பாண்டியனும் அவரது தம்பியும் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்து மயங்கி விழுந்த அவரை இருவரும் கயிற்றால் கட்டி வேனின் உள்ளே தள்ளி விட்டு தப்பி சென்றுவிட்டனர்.

பின்னர் மயக்கம் தெளிந்த சரவணன் வேனை எடுத்துக் கொண்டு மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.

இது குறித்து மேலூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அருண் பாண்டியனையும், அவரது தம்பி அஜித் குமாரையும் கைது செய்து விசாரணைநடத்தி வருகின்றனர்.

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

Show comments