சூர்யாவை எதாவது ஒன்னுன்னா பாம்பை விடுவோம்! – பழங்குடி மக்கள் ஆர்பாட்டம்!

Webdunia
திங்கள், 22 நவம்பர் 2021 (15:58 IST)
ஜெய்பீம் பட விவகாரத்தில் சூர்யாவுக்கு ஆதரவாக மதுரையில் பழங்குடி மக்கள் ஆர்பாட்டம் நடத்தியுள்ளனர்.

நடிகர் சூர்யா நடித்து த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியான படம் ஜெய்பீம். இருளர் பழங்குடி மக்களின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் பலரது பாராட்டுகளை பெற்றது.

அதேசமயம் இந்த படத்தின் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்துள்ளதாக பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சமூக வலைதளங்களில் தொடர்ந்து இந்த படத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் ஜெய்பீம் பட சர்ச்சை தொடர்பாக இயக்குனர் ஞானவேலும் தனது வருத்தங்களை பதிவு செய்துள்ளார். தற்போது மதுரையில் பழங்குடி சமூகத்தினர் பலர் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக ஆர்பாட்டம் செய்துள்ளனர். சூர்யாவுக்கு பலரும் மிரட்டல் விடுத்து வருவது குறித்து கோஷமிட்ட அவர்கள், சூர்யாவை ஏதாவது செய்ய நினைத்தால் அவர்கள் மீது பாம்பை விடுவோம் என பாம்பு, எலி முதலியவற்றை கையில் ஏந்தி ஆர்பாட்டம் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜனவரியில் நல்ல மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

திமுக கூட்டணிக்கு செல்கிறதா தேமுதிக? இரட்டை இலக்கங்களில் தொகுதிகள்?

மோடியால் பாஜகவுக்கு ஆபத்து.. பகீர் கிளப்பிய சுப்பிரமணியன் சுவாமி!

விஜய்க்கு சிபிஐ சம்மன்!.. போனாலும் பிரச்சனை... போகலானாலும் பிரச்சனை.. தளபதி சமாளிப்பாரா?!...

திமுக ஆட்சியில் 4 லட்சம் கோடி ஊழல்.. ஆளுநர் ரவியிடம் எடப்பாடி பழனிச்சாமி புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments