சென்னையை போலவே மதுரையிலும் தூய்மை பணியாளர்கள் கைது.. போராடும் ஊழியர்கள் வெளியேற்றும் போலீசார்.

Siva
செவ்வாய், 19 ஆகஸ்ட் 2025 (07:44 IST)
ஊதிய உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை மாநகராட்சி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் அதிரடியாக வெளியேற்றி வருகின்றனர். மாநகராட்சியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை தொடர்ந்து, இந்த போராட்டம் தீவிரமடைந்தது.
 
மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், தனியார்மய அரசாணையை ரத்து செய்வது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 
 
தூய்மை பணியாளர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த, மதுரை மாநகராட்சி அலுவலகத்தின் அனைத்து நுழைவாயில்களும் மூடப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 
தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து மாநகராட்சி சார்பில் இதுவரை மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், இந்த மூன்று பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்தது. மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், தங்கள் கோரிக்கைகள் நிறைவேறாததால் பணியாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, மாநகராட்சி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மட்டன் பிரியாணி, வஞ்சிர மீன்.. அ.தி.மு.க. பொதுக்குழுவில் அசத்தும் விருந்து!

நயினார் நாகேந்திரன் எந்த தொகுதியில் நின்றாலும் டெபாசிட் இழக்க வைக்க செய்வோம்: செங்கோட்டையன் சவால்

2 நாள் சரிவுக்கு பின் இந்திய பங்குச்சந்தை ஏற்றம்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. மீண்டும் உச்சம் செல்லும் வெள்ளி.. இன்று ஒரே நாளில் ரூ.8000 உயர்வு..!

அதிமுக பொது குழு இன்று கூடுகிறது.. ஓபிஎஸ்சை இணைக்க ஈபிஎஸ் சம்மதமா?

அடுத்த கட்டுரையில்
Show comments