Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவி உள்ளிட்ட 5 பேரை கொடூரமாகக் கொலை செய்த சகோதரர்கள்

Webdunia
செவ்வாய், 27 ஜனவரி 2015 (09:25 IST)
மதுரை அருகே குடும்பத்தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பொது இடத்தில், உறவினர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.
 
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள தொட்டியபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி ராமுத்தாய். இவர்களுக்கு 34 வயதுடைய பாக்கியலட்சுமி, 28 வயதுடைய கோமதி. 25 வயதுடைய வனரோஜா ஆகிய 3 மகள்கள் உள்ளனர். இவர்களில் கோமதிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கமலகண்ணன் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. 
 
இந்த தம்பதியினரிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கணவருடன் சண்டையால், தனது தந்தை சின்னச்சாமி வீட்டிற்கு கோமதி வந்து விட்டார். 
 
இந்நிலையில், சின்னசாமியின் அண்ணன் பொன்னையாவின் பேரன் சவுந்திரபாண்டியனுக்கு தொட்டியபட்டியில் நேற்று திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்தது.
 
இந்த நிகழ்ச்சிக்காக சின்னசாமி, அவரது மனைவி ராமுத்தாய் உள்பட குடும்பத்தினர், உறவினர்கள் அங்கு சென்றனர். நிகழ்ச்சி முடிந்ததும் உறவினர்களை பேருந்தில் ஏற்றி விடுவதற்காக சின்னச்சாமி, அவரது மனைவி ராமுத்தாய், மகள்கள் பாக்கியலட்சுமி, கோமதி, வனரோஜா ஆகியோர் பேருந்து நிறுத்தத்திற்கு சென்றனர். 
 
அப்போது பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த கமலகண்ணனின் சகோதரி கமலாவதி, கோமதியிடம், தன் தம்பி வாழ்க்கையை இப்படி அழித்து விட்டதாகக் கூறி சண்டை போட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. 
 
அவர்களை அங்கிருந்த பொதுமக்கள் சமாதானப்படுத்தி அவர்களை விலக்கி விட்டனர். இதன்பின்னர் வீட்டுக்கு சென்ற கமலாவதி தனது தம்பிகள் கமலக்கண்ணன், பரமசுந்தரம் ஆகியோரிடம் இது குறித்து கூறியுள்ளார். இதைக் கேட்டு அவர்கள் இருவரும் ஆத்திரமடைந்துள்ளனர்...
இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும், வீட்டில் இருந்த துப்பாக்கி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்துக்கொண்டு பேருந்து நிறுத்தத்துக்கு வந்து, அங்கு நின்று கொண்டிருந்த மாமனார் சின்னச்சாமி, மாமியார் ராமுத்தாய், மனைவி கோமதி, நாத்தனார்கள் பாக்கியலட்சுமி, வனரோஜா ஆகிய 5 பேரையும் சரமாரியாக வெட்டி உள்ளனர். மேலும் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். 
 
இதனால், அவர்கள் அனைவரும் அந்த இடத்திலேயே, ரத்த வெள்ளத்தில் சரிந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிந்தனர். 
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த, நாகையாபுரம் காவல்துறையினர் 5 பேரின் சடலங்களையும் மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
இதைத் தொடர்ந்து, இந்த பயங்கர சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய கமலக்கண்ணன் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் என்பது தெரியவந்தது.
 
இதைத் தொடர்நது அவரையும், கமலக்கண்ணன் மற்றும் அவரது தம்பி பரமசுந்தரம் ஆகியோரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறனர்.
 
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பொது இடத்தில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சசியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!