Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூடியது எத்தனை ? மூடப்போவது எத்தனை – டாஸ்மாக் வழக்கில் நீதிபதிகள் கேள்வி !

Webdunia
வியாழன், 7 பிப்ரவரி 2019 (18:14 IST)
மனப்பாறையைச் சேர்ந்த வழக்கறிஞர் தொடந்த வழக்கை விசாரித்த சென்னை உயநீதிமன்றத்தின் மதுரைக் கிளை தமிழக அரசுக்குப் பலக் கேள்விகளை முன்வைத்துள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு தனது கட்டுப்பாட்டின் கீழ் டாஸ்மாக் கடைகளை நடத்தி வருகிறது. அரசுக்கு வருமானம் அளிக்கக்கூடிய துறைகளில் இப்போது டாஸ்மாக் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. சாதாரண நாட்களில் சராசரியாக 70 கோடி ரூபாய் அளவுக்கும் பண்டிகை நாட்களில் இது அதை விட அதிகமாகவும் இதன் மூலம் வியாபாரம் நடைபெற்று வருகிறது.

ஆனால் டாஸ்மாக் கடைகளால் மக்கள் வாழ்க்கை பெரிதும் சீரழிந்து இளைஞர்கள் தவறானப் பாதையில் செல்வதாகக் கூறி சமூக ஆர்வலர்கள் மதுவிலக்கு அமல்படுத்தக் கோரி போராடி வருகின்றனர். ஆனால் அரசு அவர்களின் கோரிக்கைகளைக் கண்டுகொண்டாமல் மதுவிலக்கு என்பதை தேர்தல் வாக்குறுதியாக மட்டுமேப் பயன்படுத்தி வருகிறது.

சமீபத்தில் மூடப்பட்ட சில டாஸ்மாக் கடைகளைக் கூட மீண்டும் அரசு திறக்க ஆரம்பித்துள்ளது. டாஸ்மாக சம்மந்தமாகப் பல பொதுநல வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. அதில் ஒன்றான மணப்பாறை முன்சிப் நீதிமன்றம் முன்பாக டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தக் கூறி மணப்பாறை வழக்கறிஞர் சங்க செயலர் செல்வராஜ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ’பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகத்தில் அதிகளவில் மதுவுக்கு அடிமையானோர் அதிகளவில் உள்ளனர். இதனால் டாஸ்மாக்கின் நிர்வாக இயக்குநரை இந்த வழக்கில் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கிறது’ எனக் கூறினர்.

மேலும் தமிழக அரசுக்கு 2016 தேர்தல் அறிக்கைகளில் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படுமென அறிவித்த வாக்குறுதி என்ன ஆனது எனவும் கேள்விக்கேட்டுள்ளனர். மேலும் சிலக் கேள்விகளைக் கேட்டு அதற்கு வரும் மார்ச் 4 ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

தமிழக அரசுக்கு நீதிபதிகளின் கேள்விகள்
1. தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களின் எண்ணிக்கை எவ்வளவு?
2. டாஸ்மாக் கடை மற்றும் பார்கள் போதிய உள்கட்டமைப்பு வசதிகளுடன் உள்ளனவா, இருந்தால் அவற்றின் எண்ணிக்கை?
3. டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களுக்கு முறையான திட்ட வரைபட அனுமதி பெறப்பட்டுள்ளதா?
4. எத்தனை டாஸ்மாக் கடை மற்றும் பார்களில் தீயணைப்பு உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது?
5. டாஸ்மாக் மற்றும் பார்களுக்கு உரிமம் கோரி எத்தனை பேர் விண்ணப்பித்துள்ளனர்?
6. உரிமம் வழங்குவதை முறைப்படுத்துவதற்கான விதிகள் என்னென்ன?
7. பார்களில் வழங்கப்படும் உணவுப்பொருட்கள் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பரிசோதிக்கப்படுகிறதா?
8. அதிகாரிகள் பார்களில் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனரா?

 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments