Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரைக்கு விரைவில் வருது மெட்ரோ! – எங்கிருந்து எங்கு வரை..?

Webdunia
ஞாயிறு, 10 ஜூலை 2022 (12:38 IST)
நீண்டகாலமாக மதுரை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ள மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

சென்னையில் மெட்ரோ ரயில் சேவைகள் பயன்பாட்டில் உள்ள நிலையில் அடுத்தகட்டமாக மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியங்கள் குறித்த முன் தயாரிப்பு அறிக்கையை பாலாஜி ரயில் ரோடு சிஸ்டம்ஸ் நிறுவனம் சமர்ப்பித்துள்ளது. அதில் முதல்கட்டமாக மதுரையில் தோப்பூர் எய்ம்ஸ் கல்லூரியிலிருந்து ஒத்தக்கடை வேளாண் கல்லூரி வரை 35 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவையை அமைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 35 கிலோ மீட்டர் தூரத்திற்குள் மதுரையின் முக்கிய பகுதிகளான மதுரை பெரியார் பேருந்து நிலையம், மதுரை உயர்நீதிமன்ற கிளை, மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் உள்ளிட்ட பல பகுதிகள் வருகின்றன. விரைவில் இதற்கான ஒப்புதல் மற்றும் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் பார்க்கிங் களமாக மாறிய வேளச்சேரி மேம்பாலம்.. சென்னை மக்கள் மீண்டும் உஷார்..!

இன்று மதியம் கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல் - மக்கள் கவனத்திற்கு சில முக்கிய விவரங்கள்..!

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments