Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா எதிர்ப்பு ஆம்லேட்டா? தினுசு தினுசா வியாபாரம்!

கொரோனா எதிர்ப்பு ஆம்லேட்டா? தினுசு தினுசா வியாபாரம்!
, செவ்வாய், 17 மார்ச் 2020 (12:16 IST)
நாட்டில் கொரோனாவை பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் அதிகரித்ததோ இல்லையோ கொரோனாவை வைத்து சிலர் செய்யும் விளம்பரங்கள் வைரலாகி வருகிறது.

உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா இந்தியாவில் மெல்ல பரவ தொடங்கியுள்ளது. மக்களிடம் அரசு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நடவடிக்கைகளை ஏற்படுத்த தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஆனால் சில வதந்திகளும் மக்களிடையே அவ்வபோது பரவி விடுகின்றன.

அந்த வகையில் கோழி சாப்பிட்டால் கொரோனா வரும் என்று பரவிய வதந்தியும் அடக்கம். இது வெறும் வதந்திதான் என பல மருத்து நிபுணர்களும் தெரிவித்த பிறகும் கூட மக்களிடையே கோழிக்கறி சாப்பிடுவதில் பெரும் தயக்கம் இருந்து வருகிறது. மக்களின் தயக்கத்தை போக்க சிக்கன் கடைகளும், பிரியாணி கடைகளும் பல்வேறு சலுகைகளை அறிவித்து மக்களை கவர முயல்கின்றனர்.

அந்த வகையில் மதுரையில் ஒரு பிரியாணி கடையின் விளம்பரம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. ”கொரோனாவை எதிர்த்து தமிழா உணவு திருவிழா” என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில் கொரோனா எதிர்ப்பு கிரில், கொரோனா எதிர்ப்பு ஆம்லேட் போன்ற விதவிதமான மெனுக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. மேலும் செல்போனில் காவலன் செயலி வைத்துள்ள பெண்களுக்கு ஆண்டு முழுவதும் 10 சதவீதம் தள்ளுபடி உண்டாம்.

மதுரையின் பல பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள இந்த நூதனமான போஸ்டர் வைரலாகி வரும் நிலையில், கொரோனா குறித்த சரியான விழிப்புணர்வை ஏற்படுத்தாமல் விளம்பர யுத்தியாக பயன்படுத்துவதை சிலர் கண்டித்தும் உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காவல்துறையினர் என்னை துன்புறுத்துகின்றனர்: கமல்ஹாசன் திடுக் புகார்