Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கெடு

தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கெடு

Webdunia
திங்கள், 4 ஜூலை 2016 (23:50 IST)
அரசுப் பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
 

 
தமிழக அரசின் ஆரம்பப் பள்ளிகளில் எல்கேஜி மற்றும்  யுகேஜி வகுப்புகள் இல்லை. இதனால், தனியார் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
 
தமிழக அரசால் அமைக்கப்பட்ட முத்துக்குமரன் குழு  பரிந்துரையின்படி எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளை அரசுப் பள்ளிகளில் தொடங்க வேண்டும் என  விருத்தாசலத்தில் உள்ள மாணவர் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்க நிர்வாகிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தனர்.
 
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரம் தமிழக அரசின் கொள்கை சார்ந்த முடிவு என்ற போதிலும் மனுதரார் கோரிக்கை குறித்து தமிழக அரசு 4 மாதத்துக்குள் பரிசீலனை செய்து உரிய முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவு: மோடி, சுந்தர் பிச்சை உள்பட பிரபலங்கள் இரங்கல்..!

தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்!

தேர்தலில் தோற்ற பிறகு புதினுடன் ரகசியமாக பேசினாரா டிரம்ப்? அதிர்ச்சி தகவல்

ஆசிரியர்களுக்கு இன்று சம்பளம் விடுவிக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த விசிக: மது ஒழிப்பு மாநாடு குறித்து திண்டுக்கல் சீனிவாசன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments