Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ், கமல் மீது போலீஸ் புகார் அளித்த மதுமிதா: பெரும் பரபரப்பு

Webdunia
புதன், 4 செப்டம்பர் 2019 (20:42 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய போட்டியாளர்களில் ஒருவர் என்று கருதப்பட்ட மதுமிதா, பிக்பாஸ் வீட்டில் நடந்த ஒரு டாஸ்க்கில் காவிரி பிரச்சனை குறித்து பேசியதால், ஷெரினுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் உணர்ச்சிவசப்பட்ட மதுமிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் இதனை அடுத்து அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற விட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அந்த டாஸ்க்கின்போது உண்மையில் நடந்தது என்ன? என்பது எனக்கு மட்டுமே தெரியும் என பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த கஸ்தூரி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் 
 
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் உண்மையான நிகழ்வுகளை மக்களுக்கு காட்டவில்லை என்றும் சுவாரஸ்யத்திற்காக சண்டை போடும் காட்சிகள் மட்டுமே பிக்பாஸ் நிகழ்ச்சியில் காட்டப்படுவதாகவும் கஸ்தூரி குற்றம்சாட்டியிருந்தார். 
 
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த மதுமிதா பிக்பாஸ் நிர்வாகத்தினர்களை மிரட்டியதாகவும், இதனையடுத்து பிக்பாஸ் நிர்வாகத்தினர் மதுமிதா மீது போலீஸ் புகார் ஒன்றை அளித்ததும் தெரிந்ததே
 
இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் மற்றும் கமல் மீது மதுமிதா போலீசில் புகார் அளித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், போட்டியாளர்கள் கொடுமைப்படுத்தியதை தொகுப்பாளர் கமலும் கண்டிக்கவில்லை என்று மதுமிதா தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார் 
 
தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி 56வது நாளில் வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பியதாகவும் மதுமிதா தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனுமீது போலீசார் விரைவில் விசாரணை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் ஊழியர்கள் நள்ளிரவில் திடீர் கைது.. என்ன காரணம்?

நாளை முதல் 4 நாட்களுக்கு அரசியல் தான்: நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்யும் விஜய்,..!

வேங்கைவயல் விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் யார்? மறுவிசாரணை தேவை! - தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!

இது பெரியார் மண் இல்ல.. பெரியாரே ஒரு மண்ணுதான்! - மீண்டும் மீண்டும் சர்ச்சையில் சீமான்!

13 ஆண்டுகளாகியும் பணி நிலைப்பு வழங்கவில்லை.. இதுதான் திமுக அரசின் சமூகநீதியா? டாக்டர் ராமதாஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments