Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக தலைமை அலுவலகத்தில் மாதவன்: தீபா அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 23 மார்ச் 2018 (15:08 IST)
ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவும் அவரது கணவரும் ஆளுக்கொரு அரசியல் கட்சியை ஆரம்பித்து நடத்தி வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட தீபாவின் டிரைவரே காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சற்றுமுன்னர் தீபாவின் கணவர் மாதவன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு திடீரென சென்றார். தலைமை அலுவலகத்தில் உள்ளவர்களிடம் தான் முதல்வரை சந்திக்க வேண்டும் என்று மாதவன் கூறியதாகவும், ஆனால் அங்கு முதல்வர் இல்லை என்றவுடன் அவர் திரும்பிவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.  

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாதவன் 'முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான ஆட்சி, ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதனால், முதல்வரைச் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க அ.தி.மு.க அலுவலகத்துக்குச் சென்றேன். அ.தி.மு.க அலுவலகத்தில் முதல்வர் இல்லை. இதனால், அவரைப் பிறகு சந்திப்பேன்" என்றவரிடம் முதல்வரைச் சந்திப்பதற்கு என்ன காரணம் என்று கேட்டதற்கு, பிறகு விரிவாகப் பேசுகிறேன்

முதல்வரை நேரில் சந்தித்து தனது கட்சியை அதிமுகவுடன் இணைக்க அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments