Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆளைவிடுங்க சாமி......மலேசியா பறந்த மு.க.ஸ்டாலின்

ஆளைவிடுங்க சாமி......மலேசியா பறந்த மு.க.ஸ்டாலின்

ஆளைவிடுங்க சாமி......மலேசியா பறந்த மு.க.ஸ்டாலின்
, வெள்ளி, 27 மே 2016 (13:44 IST)
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மலேசியாவுக்கு திடீர் என பறந்தார்.
 

 
நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும், தமிழகம் முழுக்க திமுக - காங்கிரஸ் கட்சி மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு தீவிர தேர்தல் பிரசாரம் செய்தார்.
 
இந்த நிலையில் மு.க. ஸ்டாலின் மலேசியாவுக்கு இன்று  காலை திடீரென புறப்பட்டு சென்றார். அவருடன் அவரது மனைவி துர்கா, மகனும் நடிகருமான உதயநிதி, மருமகள் கீர்த்திகா உதயநிதி மற்றும் பேரக்குழந்தைகளை உடன் அழைத்துச் சென்றுள்ளார்.
 
இது குறித்து மு.க.ஸ்டாலின் நலன் விரும்பிகள் விசாரித்த போது, நடைபெற்ற தேர்தலில் திமுகவே வெற்றி பெறும் என மு.க.ஸ்டாலின் பெரிதும் நம்பினார். சூழ்நிலையும் அதுபேலவே இருந்தது. ஆனால், திமுக மாவட்டச் செயலாளர்கள் உள்குத்து வேலையில் ஈடுபட்டதால் பல தொகுதியில் தோல்வி ஏற்பட்டது. இதனால், மு.க.ஸ்டாலின் மிகவும் மனம் நொந்துப்போய் உள்ளார். இதனையடுத்தே அவர் தனது மன ஓய்வுக்காக தனது குடும்பத்துடன் மலேசியா சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதாவுக்கு அடுத்த இடத்தில் கே.சி.வீரமணி!