Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குளக்கரையில் உல்லாசமாக இருந்த காதலர்கள்! – எட்டி பார்த்த சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்!

Webdunia
ஞாயிறு, 14 ஜூன் 2020 (10:51 IST)
திருப்பூர் மாவட்டத்தில் குளக்கரையில் உல்லாசமாக இருந்த காதலர்கள் சிறுவன் ஒருவனை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் பாலிடெக்னிக் மூன்றாமாண்டு படித்து வருபவர் அஜித். இவரும் அதே பகுதியில் 11ம் வகுப்பு படித்து வரும் பெண்ணும் நீண்ட நாட்களாக காதலில் இருந்து வந்துள்ளனர். தனிமையில் சந்திக்க விரும்பிய இருவரும் குளக்கரை ஒன்றில் யாருக்கும் தெரியாமல் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது அந்த பெண்ணின் பக்கத்து வீட்டில் உள்ள 8 வயது சிறுவன் எதேச்சையாக அந்த பக்கம் வந்தபோது அவர்கள் நெருக்கமாக இருப்பதை பார்த்திருக்கிறான்.

உண்மையை வீட்டில் சொல்லி விடுவானோ என பதறிய காதல் ஜோடி சிறுவனை உடைந்து கிடந்த மதுப்பாட்டிலால் குத்தி கொன்றுவிட்டு தப்பியுள்ளனர். குளக்கரையில் பிணமாக கிடந்த சிறுவனை மீட்டு பிரேத பரிசோதனை செய்த போலீஸார், சந்தேகத்தின் பேரில் அஜித்திடம் விசாரணை மேற்கொண்டத்தில் மேற்கண்ட சம்பவங்களை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். அதை தொடர்ந்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கொலைக்கு உதவியாக இருந்த பெண் 17 வயது மைனர் என்பதால் கூர்நோக்கு இல்லத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலீஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

+8, +85, +65 தொடங்கும் எண்களில் இருந்து அழைப்பு வருகிறதா? மத்திய அரசு எச்சரிக்கை

வலுவிழந்தது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! இனி மழை எப்படி இருக்கும்? - இந்திய வானிலை ஆய்வு மையம்!

அமெரிக்காவின் தேசியப்பறவை கழுகு: அதிகாரபூா்வமாக அறிவித்த ஜோ பைடன்.. டிரம்ப் மாற்றுவாரா?

நேற்று கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின் இன்றைய பங்குச்சந்தை நிலவரம் எப்படி?

ஆப்கானிஸ்தான் மீது குண்டுமழை பொழிந்த பாகிஸ்தான்! போர் உருவாகும் சூழல்?

அடுத்த கட்டுரையில்
Show comments