Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதல் விவகாரம் பள்ளி மாணவி தற்கொலை...

Webdunia
சனி, 29 ஜூலை 2023 (21:39 IST)
நாகை மாவட்டம் அய்யூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரையன். இவரது மகள் ஷாலினி. இவர் அங்குள்ள மேல்நிலைப்பள்ளியில்  10 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சின்னதுரை என்பவரும் காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது ஷாலினியின் வீட்டிற்குத் தெரியவே பெற்றோர் மற்றும் அக்கா நந்தினி ஆகியோர் சின்னதுரையயும் ஷாலினியையும்  கண்டித்துள்ளனர். அத்துடன் ஷாலினியை அவருடன் இனிப் பழகக்கூடாது என்று கூறியதாகத் தெரிகிறது.

இதில், ஷாலினிக்கும், சின்னத்துரைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த சின்னத்துரை, தன் உறவினர்களுடன் சேர்ந்துகொண்டு, நந்தியை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுபற்றி நந்தினி கடந்த 22 ஆம் தேதி புகார் அளித்துள்ளார்.  இந்த நிலையில், கடந்த 2 ஆம் தேதி மாலை முதல் ஷாலினியை காணவில்லலை. எனவே பெற்றோர் சுற்றியுள்ள பகுதிகளில் அவரை தேடியுள்ளனர். அப்போது, ஒரு மரத்தில் ஷாலினி தூக்கிட்டு தொங்கியபடி இறந்துகிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து  நந்தினி காவல் நிலையத்தில் தன் தங்கை ஷாலினியை காதலித்து வந்த சின்னதுரை, அவரது தந்தை, தாய், சகோதரர் உள்ளிட்ட 4 பேர் மீது புகார் கொடுத்ததை அடுத்து போலீஸார் அவர்களைக் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments