Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் லாரிகள் தடுக்கப்படுகிறதா? முதல்வருக்கு வேண்டுகோள்!

Webdunia
புதன், 26 மே 2021 (18:03 IST)
அத்தியாவசிய பொருட்கள் கொண்டு வரும் லாரிகள் காவல்துறையினரால் தடுக்கப்பட்டதாகவும் இதில் முதல்வர் தலையிட வேண்டும் என்றும் லாரி உரிமையாளர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது 
 
உடுமலைப்பேட்டை தாராபுரம் திருச்சி நெடுஞ்சாலைகளில் லாரிகளை போலீஸார் சாலையில் தடுத்து நிறுத்தி சோதனை செய்து வருகின்றனர். மேலும் முழு ஊரடங்கு நேரத்தில் லாரிகளை இயக்க கூடாது என்றும் அவர்கள் கூறி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
முழு ஊரடங்கு குறித்த விதிகளில் லாரிகள் இயக்கம் பற்றிய அதிகாரபூர்வ தகவல் வரவில்லை என போலீசார் லாரிகளை அனுமதிக்க மறுப்பது லாரி உரிமையாளர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த நிலையில் லாரிகளை போலீஸார் தடுக்காமல் அனுமதி கோரி முதல்வருக்கு சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கம் கடிதம் எழுதி உள்ளது. இந்த கடிதம் குறித்து முதல்வர் விரைவில் நடவடிக்கை எடுப்பார் என தாங்கள் நம்புவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் லாரிகளை தடுத்தால் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய அத்தியாவசிய பொருள்களின் சிக்கல் ஏற்படும் என்று கூறப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments