Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளாட்சி இடைத் தேர்தல்: டாஸ்மாக் கடைகள் மூடல்

Webdunia
செவ்வாய், 16 செப்டம்பர் 2014 (07:56 IST)
உள்ளாட்சி இடைத்தேர்தலையொட்டி திருச்சி மாவட்டத்தில் இன்று முதல் 3 நாள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குப் பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் சில்லரை மதுபான விற்பனை கடைகள், மதுபான கடைகள் மற்றும் பார்கள் இன்று (16ம் தேதி) முதல் 18 ஆம் தேதி மாலை 5மணி வரையில் முடப்படுகிறது.

அதேபோல வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 22 ஆம் தேதி அன்றும் டாஸ்மாக் கடைகள் மூடப்ப்ட உள்ளது.

உள்ளாட்சி தேர்தல் நடை பெறும் கிராம பஞ்சாயத்து, பேரூராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள இடங்களில் மது விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பொறுப்பு வகிக்கும் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.

இது என்ன டிசம்பர் மாதமா? அதிகனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

என் நெஞ்சில் எட்டி உதைத்தார்.. ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் புகாரில் அதிர்ச்சி தகவல்..!

திருவண்ணாமலைக்கு மட்டும் கோயம்பேட்டிலிருந்து கூடுதல் பேருந்து வசதி! – புதிய அறிவிப்பு!

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

Show comments