Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிகக் குறுகிய கால அவகாசத்தில் உள்ளாட்சி இடைத் தேர்தல் - ஞானதேசிகன்

Webdunia
ஞாயிறு, 31 ஆகஸ்ட் 2014 (10:37 IST)
உள்ளாட்சி இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி மேலிடத்தில் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் தெரிவித்தார்.

மூப்பனார் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் ஞானதேசிகன் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மிகக் குறுகிய கால அவகாசத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுத் திரும்பப் பெறப்பட்ட அதே தேதியில், தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது காங்கிரஸ் சார்பில் போட்டியிட அடையாளம் காணப்பட்ட வேட்பாளர்கள் இப்போதும் தயாராக இருக்கின்றனர்.

தமிழகத்தில் இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்கள் எவ்வாறு நடைபெறுகிறது என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.

எனவே, இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கிடம் ஆலோசித்து முடிவு செய்யப்படும்“ என்று ஞானதேசிகன் தெரிவித்தார்.

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

Show comments