Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'வாழு.. வாழ விடு' - இதுல யாரையும் இழுத்துவிடாதீங்க..! விவாகரத்து குறித்து மனம் திறந்த ஜெயம் ரவி..!!

Senthil Velan
சனி, 21 செப்டம்பர் 2024 (15:44 IST)
வாழு வாழ விடு, யார் யார் பெயரோ எனது விவாகரத்து பிரச்சனையில் சேர்த்து வைத்து பேசுகிறார்கள் என்று நடிகர் ஜெயம்ரவி தெரிவித்தார்.
 
பிரபல நடிகர் ஜெயம் ரவி பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து, தற்போது  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வலம் வருகிறார். இவர், சுஜாதா விஜயகுமார் என்ற சினிமா மற்றும் சீரியல் தயாரிப்பாளரின் மகளான ஆர்த்தியை காதலித்து கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
 
இந்த ஜோடிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணமாகி 15 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், தனது மனைவி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி ஜெயம் ரவி அறிவித்தார். 
 
இந்நிலையில்  ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் நடித்துள்ள பிரதர் படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.  நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ஜெயம் ரவி தனது விவாகரத்து குறித்து பேசினார். அதில் ஒரே ஒரு விஷயம் தான் சொல்ல விரும்புகிறேன். வாழு வாழ விடு, யார் யார் பெயரோ எனது விவாகரத்து பிரச்சனையில் சேர்த்து வைத்து பேசுகிறார்கள் என்று தெரிவித்தார்.
 
தனிப்பட்ட வாழ்க்கையை தனிப்பட்ட வாழ்க்கையாக பார்க்க விடுங்கள் என்று அவர் கூறினார். மேலும், "கெனிஷாவின் பெயரை எல்லாம் இதில் சேர்த்து வைத்து பேசுகிறார்கள் என்றும் பாடகி கெனிஷா 600 மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் என்றும்  நிறைய உயிர்களை காப்பாற்றியவர் என்றும் தெரிவித்தார்.


ALSO READ: ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ஆபத்தானது.! இந்தியாவிற்கு தேவைப்படாது - கமல்..!!
 
கெனிஷா ஒரு சிறந்த மனநல மருத்துவர், அவருடன் சேர்ந்து ஒரு ஹீலிங் சென்டர் ஆரம்பிக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய எண்ணம், அதை கெடுக்காதீர்கள், அதனை கெடுக்கவும் முடியாது என்று ஜெயம் ரவி கூறினார். மேலும் எனது சொந்த பிரச்சனையில் தேவை இல்லாமல் எல்லோரையும் இழுக்காதீர்கள் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேலைநிறுத்தம் செய்யும் மருத்துவர்களின் கோரிக்கைகள்.. அமைச்சர் மா சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை..!

டாக்டர்களுக்கும், நோயாளிகளுக்கும் சரியான புரிதல் இருக்க வேண்டும்: தமிழிசை

மருத்துவர்கள் தாக்கப்படும்போது நடவடிக்கை எடுக்காததால் இன்னொரு சம்பவம்: அண்ணாமலை

புல்டோசர் வழக்கு: சொத்துகளை இடிக்கவழிக்காட்டு நெறிமுறைகள்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!

விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.. மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் குறித்து ஈபிஎஸ்..

அடுத்த கட்டுரையில்