Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலக்கிய ஆர்வலர்களுக்கு விருது: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

Webdunia
புதன், 13 ஜனவரி 2016 (22:20 IST)
இலக்கிய ஆர்வலர்களுக்கு தமிழக அரசு விருது வழங்கி கௌரவித்துள்ளது.
 

 
இது குறித்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:-
 
தமிழுக்கும், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் தொண்டாற்றி பெருமை சேர்த்தவர்களுக்கு 2015 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விருது பெறுவர்கள் விவரம் இதோ:
 
1. திருவள்ளுவர் விருது - 2016  முனைவர் வி.ஜி. சந்தோசம்.
 
2. தந்தை பெரியார் விருது – 2015 வி.ஆர். வேங்கன்தருமபுரி.
 
3. அண்ணல் அம்பேத்கர் விருது-2015  எ. பொன்னுசாமி.
 
4. பேரறிஞர் அண்ணா விருது – 2015 பேராசிரியர் முனைவர்பர்வத ரெஜினா பாப்பா காரைக்குடி.
 
5. பெருந்தலைவர் காமராசர் விருது – 2015 மருத்துவர் இரா. வேங்கடசாமி காந்தி நிகேதன் தே. கல்லுப்பட்டி.
 
6. மகாகவி பாரதியார் விருது – 2015 கவிஞர் பொன்னடியான்.
 
7. பாவேந்தர் பாரதிதாசன் விருது – 2015 முனைவர் வீ. ரேணுகாதேவி,மதுரை.
 
8. தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது – 2015 கி. வைத்தியநாதன்-ஆசிரியர், தினமணி.
 
9. முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது - 2015 இரா.கோ. இராசாராம் மதுரை
 
இந்த விருதுகளை  ஜனவரி 16 ஆம் தேதி சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெறும் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழகஅரசின் விருதுகள் வழங்கும் விழாவில் வழங்கப்படும்.
 
இந்த விருது பெறுவோருக்கு தலா 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான சான்றிதழ் ஆகியவை வழங்கி சிறப்பிக்கப்படும். 

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

Show comments