Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

Siva
ஞாயிறு, 22 செப்டம்பர் 2024 (14:52 IST)
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கடந்த சில நாட்களாக மதுவுக்கு எதிராக தீவிரமாக பேசி வருகிறார் என்பதும் மது ஒழிப்பு மாநாடு நடத்த இருப்பதை அடுத்து அந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் மதுக்கடைகளை ஒழிக்க வேண்டும் என்றும் தேசிய அளவில் மதுவை ஒழிப்பதே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் சேர்ந்தால் ஒரே நாளில் தேசிய அளவில் மதுவை ஒழிக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:

அனைத்துக் கட்சிகளும் மது வேண்டாம், போதைப்பொருள் வேண்டாம், மதுவிலக்கு தேவை என்னும் கருத்தில் உடன்படுகின்றன. ஆனால், இந்தியா முழுவதும் மதுக்கடைகள் திறந்து இருக்கின்றன, மது ஆலைகள் இயங்குகின்றன.

இதுதான் நாம் முன்வைக்கிற கேள்வி. எல்லா கட்சிகளும் மதுவிலக்கு தேவை என்னும் கருத்தில் உடன்படுகிற போது இன்னும் ஏன் மதுக்கடைகள் திறந்து இருக்கின்றன?  அனைவரும் சேர்ந்து ஒருமித்த முடிவு எடுக்கிற போது ஒரே நாளில் மதுக்கடைகளை மூடிவிட முடியும்!

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

உண்டியலில் விழுந்த ஐஃபோன் முருகனுக்கே சொந்தம்! பக்தருக்கு அதிர்ச்சி கொடுத்த கோவில் நிர்வாகம்!

நெல்லை நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் படுகொலை..சட்டம் - ஒழுங்கு எங்கே.. அன்புமணி கேள்வி..!

செந்தில் பாலாஜி வழக்கில் தமிழக அரசிடம் இருந்து பதில் வரவில்லை: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி

அடுத்த கட்டுரையில்
Show comments