Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மறுபடியும் துள்ளி வரும் வேல்! – வேல் யாத்திரை குறித்து எல்.முருகன் அறிவிப்பு

Webdunia
வியாழன், 12 நவம்பர் 2020 (14:13 IST)
தமிழகத்தில் அரசியல் கூட்டங்கள் நடத்த தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் வேல் யாத்திரை தொடங்க உள்ளதாக எல்.முருகன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் பாஜக வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில் தொடர்ந்து திருத்தணி, திருவொற்றியூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் வேல் யாத்திரை நடத்த முயன்ற பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். மேலும் வேல் யாத்திரைக்கு அனுமதி கோரி பாஜக தொடர்ந்த வழக்கிலும் உயர்நீதிமன்றம் பாஜகவிடன் அடுக்கான கேள்விகளை கேட்டதுடன், பக்தி யாத்திரை என்று அரசியல் யாத்திரை செய்வதாக அளிக்கப்பட்ட டிஜிபி அறிக்கையின் பேரில் கண்டித்தது.

இந்நிலையில் தாங்கள் பின்வாங்க போவதில்லை என கூறியுள்ள பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் எதிர்வரும் 17ம் தேதி முதல் திட்டமிட்டபடி வேல் யாத்திரை தொடங்கும் என்றும், இந்த வேல் யாத்திரையில் மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார். 100 பேர் வரை கலந்து கொள்ள கூடிய அரசியல் கூட்டங்களுக்கான அனுமதியை தமிழக அரசு திரும்ப பெற்றுள்ள நிலையில் எல்.முருகனின் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் வரை மெட்ரோ.. நில கையகப்படுத்த ஒப்புதல்..!

பெஹல்காம் தாக்குதல்: திருமணமான 7 நாட்களில் பலியான கடற்படை அதிகாரி..!

பெஹல்காம் தாக்குதலுக்கு இந்திய அரசுக்கு எதிராக கிளர்ச்சி தான் காரணம்: பாகிஸ்தான்..!

காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி.. 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.. தேடுதல் வேட்டை தொடர்கிறது..!

மோடியிடம் போய் சொல்.. கணவரை கொன்ற பின் மனைவியிடம் பயங்கரவாதிகள் கூறிய செய்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments