Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார் விபத்தில் சிக்கிய குஷ்பு அதிரடி கைது!

வேல் யாத்திரை
Webdunia
புதன், 18 நவம்பர் 2020 (13:30 IST)
தமிழக பாஜகவின் சார்பில் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வேல் யாத்திரை நடைபெற்று வருகிறது என்பதும் தடையை மீறி வேல் யாத்திரையை நடத்த முயன்ற பாஜகவினர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் இன்று கடலூரில் தமிழக பாஜக தலைவர்கள் வேல் யாத்திரையை நடத்த திட்டமிட்டனர். இதனை அடுத்து தமிழக பாஜக தலைவர் எல் முருகன், துணை தலைவர் அண்ணாமலை மற்றும் நடிகை குஷ்பு ஆகியோர் கடலூருக்கு இன்று சென்றனர்
 
சென்னையில் இருந்து கடலூர் செல்லும் வழியில் குஷ்புவின் கார் விபத்துக்குள்ளானது என்பதும் அதன் பின்னர் அவர் மாற்று காரில் கடலூர் சென்றடைந்தார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் கடலூரில் வேல் யாத்திரையை துவங்க முயன்ற பாஜகவின் தலைவர் எல் முருகன், துணை தலைவர் அண்ணாமலை மற்றும் நடிகை குஷ்பு ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
ஏற்கனவே கார் விபத்தில் சிக்கிய நடிகை குஷ்புவிடம் போலீசார் விசாரணை செய்த நிலையில் தற்போது தடையை மீறி வேல் யாத்திரை நடத்த முயன்றதாக கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க வேண்டும்’ பெண் சாமியார் கோரிக்கை

சென்னை, மதுரை, தேனியை அடுத்து கடலூரில் ஒரு என்கவுண்டர்.. ரவுடி சுட்டு கொலை..!

அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட செல்வப்பெருந்தகை பேச்சு.. அப்படி என்ன பேசினார்?

பானிபூரி சாப்பிட்ட 100 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு: மருத்துவமனையில் அனுமதி..!

உங்களை போல் குடும்பத்தில் இருந்து நாங்கள் தலைவரை தேர்ந்தெடுப்பதில்லை: அமித்ஷா பதிலடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments