Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலினும், நானும்; அரசரும் புலவரும் போல! – கே.எஸ்.அழகிரி!

Webdunia
புதன், 13 நவம்பர் 2019 (09:58 IST)
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, வி.சி.க ஆகியவை தங்கள் கட்சி ஆலோசனை கூட்டத்தை முடித்துக் கொண்டு கூட்டணி கட்சிகள் இடையேயான கூட்டத்தில் பங்குபெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து இன்னமும் மு.க.ஸ்டாலினும், மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் சந்தித்து பேசிக்கொள்ளவில்லை. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி “உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடனான கூட்டணி தொடரும். காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டம் முடிந்த பிறகு திமுகவுடன் கூட்டணி கட்சி சந்திப்பு நடத்துவோம். ஸ்டாலின் கோப்பெருஞ்சோழன், நான் பிசிராந்தையார். பார்க்காமலே எங்களுக்குள் பேசிக் கொள்வோம்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments