Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிருஷ்ணகிரி எம்எல்ஏ செங்குட்டுவனுக்கு கொரோனா தொற்று உறுதி

Webdunia
ஞாயிறு, 19 ஜூலை 2020 (09:39 IST)
கிருஷ்ணகிரி எம்எல்ஏ செங்குட்டுவனுக்கு கொரோனா தொற்று உறுதி
கொரோனா வைரஸ் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் நேற்றும் 4000க்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பதும், 79 பேர் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் பலியாகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனா வைரஸால் அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி பதவியில் இருக்கும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், காவல்துறையினர், மருத்துவர்கள் என பல துறையில் இருக்கும் பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
 
அந்த வகையில் நேற்று கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதி திமுக எம்எல்ஏ கணேசன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல் திமுக தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று கிருஷ்ணகிரி எம்எல்ஏ செங்குட்டுவன் அவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரும் திமுக எம்.எல்.ஏ என்பது குறிப்ப்பிடத்தக்கது
 
கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ செங்குட்டுவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

இன்ஸ்டாகிராம் நேரலையில் தூக்கில் தொங்கிய 19 வயது இளம்பெண்: அதிர்ச்சியில் ஃபாலோயர்கள்

குஷ்பு கைது கண்டிக்கத்தக்கது: அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments